கண்ணன்!

வண்ண மலர்ச்சோலை!

வண்டு பெண்டிர் கூட்டம்!

வந்து விட்டான்…

கண்ணன் குழலோடு!!

-பிரியா பாஸ்கரன் 🎶 💐

முதலாளி – தொழிலாளி!

ஆசை ‘மோகம்’ வந்து..

ஈகை ‘சொல்’ மறந்து..

ஊழியன் ‘விசுவாசம்’ கறந்து..

ஏளனம் ‘மமதை’ மிதந்து..

“ஐயா” பெயர் சுமந்து..

ஒட்டு ‘உயிர்’ பிழிந்து..

ஓட விட்டான்!!

அகம் மகிழ்ந்து..

ஆசை துறந்து..

இருப்பது கொண்டு..

ஈரம் சொட்ட..

உடல் நனைந்து..

ஊண் மறந்து..

எருது பிடித்து..

ஏர் உழுது..

“ஐயா”

ஒலி கேட்டு

ஓடி வந்தான்!!

-பிரியா பாஸ்கரன் 👩‍🌾

தமிழன்னை!

மழையே நீ எனை

மறந்தாலும்

மறவாமல் நி(ந)னைத்திருப்பாள்

கவிதை மழையில்..

என் தமிழன்னை!!

-பிரியா பாஸ்கரன் 🌧 ☔️

அருகனே!

எதை(னை)யும் வெல்வேன்!

தினமும் உன்

திருவடி பணிவதால்!

முதல்வனே! முக்குடையானே!

அருகனே! ஆதிபகவனே!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾🙏🏾🙏🏾

மனைவி!

மானே..மானே..

மயிலே..மயிலே..

தேனே..தேனே..

அமுதே..அமுதே..

யாழே.. யாழே..

உயிரே.. உயிரே..

நீ தானே.. நீ தாரமே!!

-பிரியா பாஸ்கரன் 💞

அம்மா!

துவண்ட போது

தோழியாய்…

மருண்ட போது

பாதுகாவலனாய்..

இருண்ட போது

அகல் விளக்காய்..

உருண்ட போது

வேலியாய்..

தடம் புரண்ட போது

வழிகாட்டியாய்..

அறியாமையைய் நீக்கிய போது

ஆசானாய்..

தாங்கி நின்றாய்… நீ(தா)யே!

– பிரியா பாஸ்கரன் 🤗😍

விவசாயி!

மயில் போல தோகை

விரித்தாடி

மான் போல துள்ளிக்

குதித்தோடி

கான குயில் போல

கள்ளித்துப்பாடி

காண ஓடி வந்தேன்

வானவில் என்று

வறண்ட நிலத்தில்

வர்(ண்)ணம் தீட்டியதை!!

– பிரியா பாஸ்கரன் 🌈

தண்ணீர் பஞ்சம்!

வானவில்லைப் பார்த்து
சந்தோஷப்பட்டேன்
நிஜத்தில் – நான்
வானவில்லைப் பார்த்து
சண்டையிட்டால்
கனவில் – என் அக்கா
வருடத்திற்க்கு ஒருமுறையாவது
வருவாயா என்று?

-பிரியா பாஸ்கரன் 🌈

யோகா!

கெட்டதை வெளியேற்றி..
நல்லதை உள்ளிழுத்து..
உடலை பணித்து…
உள்ளத்தை ஒருங்கிணைத்து..
அகத்தில் எனை நினைத்து..
தேடினேன் என்னுள் எனை!!
கிடைத்தது – அமைதி!!

-பிரியா பாஸ்கரன் 🧘‍♀