
வயிற்றில் சுமக்காமல்
மார்பில் சுமந்து..
நடை பயில்கையில்
தடுத்து வீழ்ந்தால்
தானாக காலுன்றி எழ
கற்று கொடுத்து..
கற்கையில்
தளர்ந்து போனால்
தன்னம்பிக்கையூட்டி..
தடம் புரண்டால்
திட்டி விட்டு
தட்டி கொடுத்து..
பணியில்
துவண்டு போனால்
இரவு கழிந்து விடியல்
நிச்சயமென்ற நிதர்சனத்தை
நினையுறுத்தி..
வெற்றி கணிகள்
வெகு தூரத்தில் இல்லை
என்றுணர்த்தி..
வாழ்வில்
கலங்கி போனால்
காத்து நிற்கும்
தெய்வமாய்..
துவண்டு போனால்
தோள் கொடுக்கும்
தோழனாய்..
கண்ணீர் விட்டழுதால்
தாங்கி நிற்கும்
தாயுமானவனே தந்தை!!
-பிரியா பாஸ்கரன் ❤








