இரண்டு குழந்தைகள்
ஒரே பொம்மை வேண்டுமெனச்
சண்டையிடுகின்றன
அவ்வளாகத்தில்
ஒருவருக்கொருவர் பிடித்திழுக்க
கைகள் பிரிந்து போய்
கீழே விழுந்து காலடியில்
மிதி பட்டு அழுக்காகிறது
பணிப்பெண்ணொருத்தி ஓடிவந்து
அப்பொம்மையை மென்மையாய்
எடுத்தணைத்து
மென்குரலில் வலிக்கிறதா உனக்கென்று
உரையாடியபடியே
பொம்மையின் பழுதுப் பகுதிகளை
தையலிட்டு
அழுக்கைக் களைகிறாள்
கவனித்த குழந்தைகள்
மெதுவாய் தடவியபடி
ஒத்தடமிட்டு மருந்திடுகின்றன
அப்பொம்மைக்கு
~ ப்ரியா பாஸ்கரன்

எடுக்க முனைந்தால் பிளவு
கொடுக்க நினைத்தால் உறவு❤️!
LikeLike