மகமாயி மனசு வைக்க மும்மாரி மழ பெய்ய கொள்ளையில வெதச்ச கடலையும் வெளஞ்சு பூவா சிரிச்சியிருக்க பச்ச செடிகள பந்தமா கூடி புடுங்கி விக்க கனாக்காண
நுணுக்கமா வரும் நோவ தடுக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட சொந்த பந்தமெல்லா உதவ முடியாம துடிதுடிக்க பூமித்தாய் கொடுத்த காயும் முத்திப் போவுமோ பறிக்க முடியாம பரமேசா?
மழ வந்தா வெதக்க தானியம் இல்ல வெதச்சா மழ வரல மழ வந்து விளஞ்சா அறுவட செய்ய ஆளில்ல ஆளிலிருந்தா வெல போகல வெல போன நல்ல வெலைக்கு வாங்க சந்தயில மண்டியில்ல மண்டியிருந்தா காசு கிடைக்க வாரமாகுமினு வாங்குறவன் சொல்ல
கார் கூந்தலழகில் மயில் நர்த்தனம் மறக்க மலர் சூடிய வாசத்தில் மல்லிகை மணமிழக்க அகன்ற நெற்றியழகில் பிறை தேய்ந்து மறைய வளைந்த புருவமழகில் வில் நாணைத் தவறவிட கூரிய மூக்கழகில் பச்சைகிளி கூர் மழுங்க சிவந்த உதட்டழகில் கோவைப்பழம் நாண துள்ளும் கண்ணழகில் மீன் நீரில் துடிக்க மெல்லிய கையழகில் அல்லித்தண்டு எடை குறைக்க கண்ணாடி வளைவி இசையில் கானக்குயில் பாட மறக்க கால் கொலுசு ஓசையில் காலையில் கூவும் கோழி எழ அசைந்தாடும் நடையழகில் காற்று வீசா நிறுத்த பச்சைப் பட்டுப்பாவாடையழகில் தட்டாம்பூச்சி வண்ணம் இழக்க பாவையிவள் பார்வையில்..!