
நிலவின் வெட்கம்…
அவளின் வரிகளில்…
காதலிப்பது
வேண்டுதல்..
காதலிக்கப்படுவது
வரம்…
நீ என்னுடன் இருக்கும்
நேரம் சொர்க்கம்..
நான் தனித்து இருக்கும்
நேரம் நரகம்..
உலகமே அழகானது
உன் தோளில் நான் சாய…
இமைகள் மூடினாலும்
விழித்திருக்கிறது
என்னவனின் காதல்
பார்வை…
அவனின் வரிகளில்…
உன் முகப்பொலிவில்
நிலவு வெட்கம் கொண்டு
மறைந்து கொண்டது
அமாவாசையாக…
உனக்காகக் காத்திருக்கும்
நொடிகளில் கடிகாரம்
ஓடுவதில்லை..
உன் செய்திக்காக
ஏங்குகிறது
என் அலைபேசி…
நீ தலைகோதி
விளையாடவே
முடிகளை வளர்க்கிறேன்…
உன் கன்னக் குழியில்
வீழ்ந்து எழுந்தேன்
பல்லாயிரம் முறை உயிர்ப்புடன்..
~பிரியமுடன் பிரியா 💕









