கழைக்கூத்து…

இலவச இன்னிசை கச்சேரி

இசை மழையில் நனைய

இன்பமுடன் அணுகவும்…

இப்படிக்கு கானக்குயில்கள்…

🌺

எம்மினம் வாழ்ந்தால்

உம்மினம் வாழும்…

🌺

முட்டி அடித்து முந்தி

எட்டி உதைத்து ஏறித்

தட்டிப் பறிக்கும் கெட்ட

பழக்கத்தை ஒழிக்க…

ஒழுக்கத்தைக்

கற்றுக்கொள்வோம்

பறவைகளிடம்…

🌺

இரை தேடி

அலைந்தாலும்

உறவு நாடி கூடிடும்

தினந்தோறும்…

🌺

விழும் எச்சமும்

எழும் மரமாய்…

🌺

கட்டடக் கலை

கற்காமலே

சுள்ளிகளால் கூடுகளைக்

கட்டிடும் நிபுணன்…

~பிரியமுடன் பிரியா 💕

காதலர் தினம்…

பொறுப்புத் துறப்பு :

இது வெறும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.

மழை பெய்ய

தலை நனைந்திட

கையணைப்பில் இழுந்து

குடை பிடிப்பான்

சாப்பிடும் போது

புரை ஏறிட

தண்ணீர் குவளை

எடுத்து நீட்டுவான்

தலை வலியால்

அழுது துடித்திட

தைலம் தடவிப்

பிடித்து விடுவான்

பிள்ளை அழுதால்

தொலைக்காட்சியை நிறுத்தி

அள்ளி அணைத்திட

ஒத்தாசை செய்வான்

சமையல் அறையில்

காய்கறி வெட்டி

குழம்பு வைத்திட

கத்தியைப் பிடிப்பான்

இருவரும் வேலைக்குச்

செல்ல அவள்

துணி துவைத்திட

மடித்து வைப்பான்

என்றெல்லாம் எண்ணி

ஏமாந்து போன

என் இனிய தோழிகளுக்குக்

காதலர் தின வாழ்த்துகள்

கொத்தாக ரோசாப்பூவை

மொத்தமாக வாங்கி

சத்தமாகப் பாட்டுப் பாடி

பாந்தமாக கொடுத்திடுவான்

என எதிர்பார்த்து

அவன் காதலர் தினத்தை

மறந்திருப்பான் எனத்தெரிந்தே

கண்கள் அவன் வரும்

வழியைக் கண்டு

கைகள் நீட்டக் காத்திடுவாள்!

பெற்றோர் பார்த்த பையனை

மணந்திருந்தாலும்

காதலித்துக் கைபிடித்த பையனை

மணந்திருந்தாலும்

அன்புடன் அவனுக்காகவே

வாழ்ந்திடும் அனைத்து

பெண்களுக்கும்

சமர்ப்பணம் !!!!

~பிரியமுடன் பிரியா 💕

காதலும் காதல் சார்ந்தனவும் துளிப்பாக்கள்…

முழுதாக நனைந்தேன்

சலதோசம் பிடித்தது

காதல் மழையில்…!

🌺

அவனும் நோக்கினான்

அவளும் நோக்கினாள்

NoKia அலைபேசி விற்பனையை..!

🌺

ஒரு கன்னத்தில் முத்தம் கொடுத்தால்

மௌனமாக மறு கன்னத்தைக் காண்பித்தாள்

புகைப்படத்தில்..!

🌺

முழுதும் நனைந்து விட்டது

பிறகு முக்காடு எதற்கு

காதலர்கள் அதனால்..!

🌺

பூக்களைப் பறிக்காதீர்

அபராதம் விதிக்கப்படும்

ரோசா முள்..!

🌺

உதட்டோடு உதட்டு முத்தம்

சுவாசத்தை நிறைக்கிறான்

புல்லாங்குழலில்..!

~பிரியமுடன் பிரியா 💕

தேடலின் தேடுதல் தேடல்…

அருவியின் தேடல் நதி

நதியின் தேடல் கடல்

கடலின் தேடல் அலை

அலையின் தேடல் கரை!

காற்றின் தேடல் இசை

இசையின் தேடல் நாதம்

நாதத்தின் தேடல் சுவரம்

சுவரத்தின் தேடல் இராகம்!

முகிலின் தேடல் மழை

மழையின் தேடல் மண்

மண்ணின் தேடல் விதை

விதையின் தேடல் விருட்சம்!

விருட்சத்தின் தேடல் மலர்

மலரின் தேடல் மணம்

மணத்தின் தேடல் வண்டு

வண்டின் தேடல் தேன்!

நிலவின் தேடல் சூரியன்

சூரியனின் தேடல் வெயில்

வெயிலின் தேடல் நிழல்

நிழலின் தேடல் பகல்!

வறுமையின் தேடல் உழைப்பு

உழைப்பின் தேடல் வெற்றி

வெற்றியின் தேடல் புகழ்

புகழின் தேடல் சரித்திரம்!

கல்வியின் தேடல் அறிவு

அறிவின் தேடல் தெளிவு

தெளிவின் தேடல் புரிதல்

புரிதலின் தேடல் இலக்கு!

வாழ்வின் தேடல் உறவு

உறவின் தேடல் நட்பு

நட்பின் தேடல் ஆனந்தம்

ஆனந்தத்தின் தேடல் ஆரோக்கியம்!

பசியின் தேடல் உணவு

உணவின் தேடல் உழவு

உழவின் தேடல் உலகம்

உலகின் தேடல் சுழற்சி!

உளியின் தேடல் சிற்பி

சிற்பியின் தேடல் சிற்பம்

சிற்பத்தின் தேடல் கலை

கலையின் தேடல் கடவுள்!

கடவுளின் தேடல் தொண்டர்

தொண்டரின் தேடல் பத்தி

பத்தியின் தேடல் ஞானம்

ஞானத்தின் தேடல் முக்தி!

கனவின் தேடல் கற்பனை

கற்பனையின் தேடல் கவிதை

கவிதையின் தேடல் காதல்

காதலின் தேடல் அன்பு!

இரவின் தேடல் ஏகாந்தம்

ஏகாந்தத்தின் தேடல் தனிமை

தனிமையின் தேடல் அவன்

அவனின் தேடல் நான்!

~பிரியமுடன் பிரியா 💕

சிக்கி கொண்டேன் காதலில்…

உசுரா உன்ன நெஞ்சுல

நெனச்சு

இதமா இரண்டு கண்ணுல

நெறச்சு

மணியா முத்து விழியில

நுழைஞ்சு

பதமா ஆச பார்வையில

இணைஞ்சு

சுவசமா முழுக்க என்னில

விரிஞ்சு

நேசமா என் இதயத்தில

பதிஞ்சு

அழகா சுங்குடி புடவையில

அசைஞ்சு

பாந்தமா பொட்டு வகிட்டுல

பதிச்சு

அளவா பூ கொண்டையில

வைச்சு

வரமா அம்சமா வாழ்வில

அமைஞ்சு

அம்மாவா தாங்கி இக்கட்டில

அரவணைச்சு

தாதியா எல்லாமும் வேண்டியதில

செஞ்சு

வசமா சிக்கவச்ச காதலில

கொழஞ்சு…!

~பிரியமுடன் பிரியா 💕

என்றும் காதல்…

தைப் பிறந்திட

திருமணம் கூடிட

மன்னவன் கண்டிட

பெற்றோர்கள் முடிவெடுத்திட

நிச்சயம் நடந்திட

பந்தங்கள் கூடிட

கரங்கள் கோர்த்திட

நன்னாளில் மாலையிட

மாங்கல்யம் பூட்டிட

மணவாளன் ஆகிட

பெரியோர்கள் ஆசிர்வதித்திட

இருமனங்கள் இணைந்திட

வாழ்க்கை இனித்திட

இல்லறம் சிறந்திட

பிள்ளைகள் பிறந்திட

வளர்ந்து ஆளாகிட

கடமைகள் முடிந்திட

காலங்கள் உருண்டோட

கண்ணாளனைக் கண்டிட

முடிகள் நரைத்திட

அழகு பெருகிட

ஆளுமை கூடிட

மீசை முறுக்கிட

சண்டியர் நடைபோட

நெஞ்சம் அள்ளிட

விழிகள் மலர்ந்திட

பார்வை கவ்விட

நாணம் மேலிட

ஓரப்பார்வை பார்த்திட

அவரும் வெட்கப்பட

மனது படபடத்திட

இளமை உயிர்த்திட

உணர்வு பிணைந்திட

விழிகள் உறவாட

நாளும் மகிழ்ந்திட

மெளனமொழி பேசிட

பாசம் பெருகிட

புரிதல் மேம்பட

சேயாய் மாறிட

தாயாய் போற்றிட

வாழ்வாங்கு வாழ்ந்திட

காதலே சக்தி…!

~பிரியமுடன் பிரியா 💕

அழகோவியம்…

கொஞ்சும் மொழியழகு

கோப கணலழகு

பேசும் விழியழகு

விழியின் மணியழகு

துடிக்கும் இமையழகு

முத்துப் பல்லழகு

கிளி மூக்கழகு

மூக்குச் சிவப்பழகு

சுவாசிக்கும் மூச்சழகு

வில்லான புருவமழகு

பிறை நெற்றியழகு

நெற்றி பொட்டழகு

கள்ளச் சிரிப்பழகு

சிரிக்கும் உதட்டழகு

அசையும் வாயழகு

ஆடும் சிமிக்கியழகு(ஜிமிக்கி)

பறக்கும் முடியழகு

நீண்ட கார்கூந்தலழகு

சூடும் மலரழகு

பாடும் குரலழகு

அடிக்கும் கரங்களழகு

தீண்டும் விரலழகு

விரலின் நுணியழகு

சங்கு கழுத்தழகு

அணிந்த முத்துமாலையழகு

தண்டு காலழகு

மெல்லிய பாதமழகு

சிணுங்கும் கொலுசழகு

துள்ளும் நடையழகு

உடுத்தும் உடையழகு

வடிக்கும் கவியழகு

மலரான உடலழகு

பேசா மெளனமழகு

மொத்தத்தில் அவள்

அழகோ அழகு…!

~பிரியமுடன் பிரியா 💕

பேரழகன்…

வீர நடையழகு

நடக்கும் கம்பீரமழகு

முறுக்கு மீசையழகு

கண்டிக்கும் பேச்சழகு

நீண்ட மூக்கழகு

பெரிய காதழகு

வரிசைப் பல்லழகு

விரியும் உதடழகு

விரிந்த நெற்றியழகு

வளைந்த புருவமழகு

அணிந்த பட்டையழகு

கழுத்தில் ருத்திராட்சமழகு

அணைக்கும் கரங்களழகு

கடிகார மணிகட்டழகு

அலையும் முடியழகு

முடிகோதும் விரலழகு

விடும் மூச்சழகு

கூரிய பார்வையழகு

மலரும் விழியழகு

கண்ணின் மணியழகு

குடையான இமையழகு

உடுத்தும் சட்டையழகு

கட்டும் வேட்டியழகு

தோளில் துண்டழகு

பரந்த மார்பழகு

அகண்ட தோளழகு

நிமிர்ந்த நெஞ்சமழகு

உறுதியான காலழகு

பாத ஒலியழகு

படிக்கும் பாட்டழகு

ஒலிக்கும் குரலழகு

எழுதாத கவியழகு

தேக்கு உடலழகு

சண்டியர் பேச்சழகு

காதல் மெளனமழகு

மொத்தத்தில் அவன்

அழகோ அழகு!!

~பிரியமுடன் பிரியா 💕

நாணயத்தின் நாணயம்…

கறை படிந்த காசானாலும்

கறைப் போக்கும்

சலவை எந்திரத்தில்…

🌸

நாணயமும் நாணயத்தை

இழந்ததோ செல்லாக்காசால்…

🌸

சுண்டிவிட்ட நாணயம்

விளையாட்டில்..

தவறவிட்ட நாணயம்

வாழ்க்கையில்..

நிர்ணயிக்கும் வெற்றி தோல்வியை…

🌸

மண் உண்டியலில் நிறைக்கலாம்

சில்லறை தனங்களை..

மன உண்டியலில் நீக்கலாம்

சில்லறைதனங்களை…

🌸

கோடியில் புரண்டாலும்

கோடியுடுத்தி கூட வருவது

ஒற்றை ரூபாய் தான்…

🌸

நாணயத்தை அடகு வைத்து

நாணயம் இழந்தான்

சூதாட்டத்தில்(பந்தயத்தில்)…

~பிரியமுடன் பிரியா 💰

தொடுவானம் நீ…

எட்டி பிடித்துக் கைப்பற்றும் …

என் தொடுவானம் நீ!

🌸

தலைகீழாக நின்றாவது

சாதித்துவிடும் காதல்

அது வெற்றி பெற…

🌸

நீள நீலக் கடலும்

நீல நீள வானமும்

பேசிக் கொண்டனவோ

ஒரே வண்ணத்தில்

ஆடையணிய…

~பிரியமுடன் பிரியா 💕