எ க் காலத்திலும் என்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த மொழி! எ ங் கள் காதில் இன்பத் தேன் பாய்ச்சும் இனிய மொழி! அ ச் சமில்லை அச்சமில்லை என என்பாட்டன் பாரதி சொல்லித் தந்த மொழி! அ ஞ் ஞானம் அகற்றும் அரும்பெரும் நூல்கள் தந்த மொழி! ஏ ட் டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என கற்றும் கொடுத்த மொழி! எ ண் ணத்தில் நிறைந்து எண்ணமெல்லாம் ஒளிரச் செய்த மொழி! எ த் திசையும் பரவிப் புகழ் மணக்கும் எங்கள் அருமை மொழி! எ ந் நாட்டிலும் தமிழன் என சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என அறிவுறுத்தும் மொழி! எ ப் பொழுதும் அணைத்து ஆறுதல் தரும் மொழி! க ம் பன் வீட்டுத் தறியும் கவி பாடி காவியம் படைத்த மொழி! தா ய் கொஞ்சி குலவி கற்றுத் தந்த தன்னிகரில்லாத மொழி! பா ர் போற்றும் பழமையான சிறந்த மொழி! க ல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி! இ வ் வுலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறள் தந்த மொழி! வா ழ் வைச் செம்மைப் படுத்தும் மொழி! உ ள் ளத்தில் உவகை ஊற்றாய் பிறக்கக் காரணமான மொழி! ஏ ற் றம் தவிர்த்து வேறெதனையும் தராத மொழி! எ ன் தாய்மொழி தமிழ் மொழி பல்லாண்டு வாழிய வாழியவே..!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” –பாரதியார்.
கல்வெட்டில் பெயர் பதிக்க கருப்பு நோட்டுகளை வெள்ளையாக்க ஊர் தனக்காரர் பெயரைத் தக்க வைக்க ஊழல்களில் ஈட்டிய வருமானத்தில் சிறுபங்கைக் காணிக்கையாக்க வாங்கின இலஞ்சத்திற்குப் பரிகாரமாகப் பங்கு வைக்க விளம்பரம் தேட விலைமதிப்புள்ள நகைகளைக் கோவிலுக்குக் கொடை கொடுக்க இருப்போர்…
கருவறையில் இருக்கும் அம்மனுக்கு நகைபோட்டு அழகு பார்ப்பதைவிட பளபள பளிக்கு தரை பதிப்பதைவிட உண்டியலில் சில்லறையிட்டு நிரப்புவதைவிட சிறப்புக் கட்டணம் செலுத்தித் தரிசிப்பதைவிட கட்டுகட்டாகப் பணத்தைக் கடவுள் பெயரைச் சொல்லி முடக்குவதைவிட
இல்லாதவனுக்கு அடுத்த வேளை உண்ணக் கவளம் சோறு கிடைக்க வேலையில்லாத பட்டதாரி ஊரை ஒழிக்க பிச்சைக்காரர் இல்லாத தெருவை உருவாக்க இளம் சிறார்களுக்குக் கல்வி அளிக்க ஆதரவற்ற முதியோர் நிலை சிறக்க ஆன்மீகத்தை அரசியலாக்கி பொருள் ஈட்டுவதைத் தடுக்க எத்தனையோ கனவுகள் நனவாக்க பயன்படுத்தினால் உலகளவில் நம் நாடு வளர்ந்த நாடாகியிருக்கும் இன்றோ நீயும் கடவுளாய் ஆகியிருப்பாய் என்றோ..