
பின்பி கவிதை முயற்சி…
தேயுதே மாயமா
மேக முகமே
ராதா தாரா…
மேள தாளமே(கல்யாண மேளம்)
தோணாதோ…
மோனமோ நீ மோனமோ?
போ நீ போ…
மேள தாளமே
தோணுதோ?
மாமா மாமா…
தேடுதே தேடுதே
தாளாதா…
வாழவா நீ வாழவா…
~பிரியமுடன் பிரியா 💕
My thoughts and lyrics

பின்பி கவிதை முயற்சி…
தேயுதே மாயமா
மேக முகமே
ராதா தாரா…
மேள தாளமே(கல்யாண மேளம்)
தோணாதோ…
மோனமோ நீ மோனமோ?
போ நீ போ…
மேள தாளமே
தோணுதோ?
மாமா மாமா…
தேடுதே தேடுதே
தாளாதா…
வாழவா நீ வாழவா…
~பிரியமுடன் பிரியா 💕

பாட்டியின் மரப்பெட்டி சாவி
தொலைந்து கிடைத்ததும்
திறந்து பார்க்க.. என்
விளையாட்டு பொம்மைகள்
பொக்கிசங்களாய்…
🌸
மண்டூவாய் உணர
தேடிய விடைகள்
Google ல் கிடைக்க
மகிழ்ச்சியாய் மாறிய
தருணங்கள்…
🌸
வள்ளுவனின்
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.”
சொல்லுக்கேற்ப
ஒன்பது வயது
மகன் தேடித் தேடி வாங்கி
நட்ட செடிகளில்
விளைந்த காய்கறியின்
சுவையில்…
🌸
மனம் வாடும்
நிலையில் அருகனை
சண்டையிட்டுச் சரணடைந்து
இணைகழல் தொழுது
ஆறுதல் பெற்ற கணத்தில்..
🌸
மனத்துக்கினியவரிடம்
முற்றுப்பெறாமல்
வினவும் வினாக்களுக்கு
மௌனமே விடையானாலும்
தேடல் சுகமானது…
~பிரியமுடன் பிரியா 💕

ஓடும் மனதிலே கேள்விகள் எண்ணற்ற;
தேட கிடைக்குமே தேடியவை – நாடி
தெரிந்ததும்; அந்த தருணம் அழகாய்
புரிந்ததும்; தேடல் சுகம்….
~பிரியமுடன் பிரியா 🙏🏻

சோறு ஊட்டத்
தாயுமானவர்…
🌸
நிலாச்சோறு ஊட்டாமலே
அம்புலி மாமா கதை சொல்லாமலே
ஒருவாய் சாப்பிடுடா சொல்ல
ஒன்பது வாய் உள்ளிறங்கும்
உன் ஒற்றை பார்வையில்…
🌸
நடைபழகும் நாட்களில்
தடுமாறி விழ
மனம் தவிக்கத்
தானே எழச்சொல்லி
தன்னம்பிக்கை ஊட்டுபவர்…
🌸
எனக்குப் பிடித்த
எண் மூன்று
ஏன்னா அப்பா அம்மா
மூன்று எழுத்து…
🌸
என்றும் பிடித்த
கதாநாயகன் அப்பா…
🌸
தாய்க்குப் பின் தாரம்
தந்தைக்குப் பின் யாருமில்லை…
~பிரியமுடன் பிரியா 💐

பின்பு கவிதை முயற்சி…
வா தாத்தா வா
மாயாமா தேயாதே
வா தாத்தா வா …
வா தாத்தா வா
துவளுவது பாப்பா
வா தாத்தா வா…
வா தாத்தா வா
தேடுதே பாப்பா
வா தாத்தா வா…
~பிரியமுடன் பிரியா 💕

நெஞ்சு உருக…
நெஞ்சு உருக உருக வந்து நிறைஞ்ச இதமா
மனசு மறுக மறுக இறுக்கி பிடிச்ச சுகமா
யாரோ இவனோ மீட்டும் யாழின் குரலோ
யாரோ இவனோ தீண்டும் மழையின் முகிலோ
உந்தன் பேச்சு பார்வை தானே எந்தன் மூச்சே ஓ…
உன்னில் நீண்ட பேச்சென்றால் எந்தன் பேச்சே
கண்ணே உன்னால் கவிதை வடித்தேன்
உன்னைத் தேடி விழியில் நிறைத்தேன்
காற்றை இழுத்தாலும் சுவாசம் நீதானே
உயிரைத் தவிர உன்னிடம் பகிர எதுவும் இல்லை
நெஞ்சு உருக உருக வந்து நிறைஞ்ச இதமா
மனசு மறுக மறுக இறுக்கி பிடிச்ச
சுகமா
இனிய சிரிப்பில் மயங்கும் மங்கை இவளோ
உண்மை உடைத்து உரைத்த உள்ளம் இவளோ
மனதில் கேட்கும் குரலும் நீயே
அருகன் தந்த அன்பும் நீயே
கனவில் நான் காணும் உருவம் நீதானே
கண்ணைவிழித்தால் காணாமல் தவித்துப் போவேன்
நெஞ்சு உருக உருக வந்து நிறைஞ்ச இதமா
மனசு மறுக மறுக இறுக்கி பிடிச்ச
சுகமா
யாரோ இவனோ மீட்டும் யாழின் குரலோ
யாரோ இவனோ தீண்டும் மழையின் முகிலோ…
~பிரியமுடன் பிரியா 💕

இப்ப அவன் பாடுறான்..
ஏ மக்கு மாங்கா
பச்ச கலரு புடவயில
சீக்கா தூளு வாசத்துல
விரிச்சு வைச்ச கூந்தலில
புருவத்து மத்தில
வெச்சிருக்க பொட்டுல
குட்டியா மின்னுர கம்மலில
மை தீட்டுன கண்ணுல
மொகத்துல விழற கன்னக் குழியில
சின்னதா சிரிக்குற சிரிப்புல
மொறச்சி மொறச்சி பாக்குற
மொத்தமா நெஞ்சத்த அள்ளுற…
~பிரியமுடன் பிரியா 💕

இந்த திரைப்பட காட்சிக்கு ஒரு கவிதை. அவள் சொல்வது போல.. நாளை அவன் குரலில்…
மாங்கா மங்குனி…
ஏண்டா மாங்கா மங்குனி
வெள்ளி கெழம காலையில
வேங்கயம்மன் கோவிலுக்கு
வருவேன்னு தெரிஞ்சி…
வேட்டி சட்டையில அம்சமா
வந்து பாத்தும் பாக்கதது போல
வெளக்கு ஏத்துன எடத்துல
வேகமா பாத்துட்டு போன உன்ன
பக்கதுல எப்போ
பாப்போமுனு நெனக்க
Botany வாத்தி
பக்கம் பக்கமா கொடுத்த
பாடத்துக்கு வெளக்கம் சொல்ல
பக்கம் வர
பச்ச சட்டையில
பளபளக்கும் தலைமுடியில
சண்டியரு மீசையில
மொகத்த மறைக்கர தாடியில
பச்சக்குனு நெஞ்சில
பச்சகுத்தி வைச்சாப்புல
ஒட்டிகிட்ட உன்ன
வைச்ச கண்ணு வாங்காம பாக்க
ஏக்கமெலாம் எப்போவோ
தூசா பறந்துபோச்சி
Botany பாடமும்
மறந்து போச்சி..
~பிரியமுடன் பிரியா 💕

காத்திருக்கும் சுகத்தினை
கற்றுக் கொடுத்த கனவான்…
🌸
தூரமிருக்கும் சொந்தங்களுக்குத்
தூது செல்லும் தூதுவர்…
🌸
உள்ளத்து உணர்வுகளை உள்ளது
உள்ளபடி சுமந்து வரும் கண்ணாடி..
🌸
சொந்தங்களுக்குப் பாலமாக
இருக்கும் உன்னத உறவு..
🌸
வலியோர் எளியோர்
வித்தியாசம் பார்க்காதவன்…
🌸
பிறப்பு முதல் இறப்புவரை
ஓலை சுமக்கும் ஊழியன்…
🌸
கணிப்பொறி காண முடியாத
இடத்திலும் இருக்கும் கருவி…
🌸
மலைவாழ் மக்களுக்கு
உற்ற தோழன்..
🌸
எல்லை காக்கும் வீரனுக்கு
வீட்டிலிருந்து வரும்
ஊக்கமளிக்கும் மருந்து…
🌸
எண்ணற்ற எண்ணங்களைச்
சுமக்கும் இருதயம்…
🌸
மனப்பாரங்களை
இறக்கி வைக்கும் இடம்…
🌸
ஏழைக்கு ஏத்த
எள்ளுருண்டை…
🌸
ஓய்வில்லாமல் உழைக்கும்
ஊழியன்…
🌸
காலமெல்லாம்
கடமையாற்றும் காவலன்…
🌸
மாதாந்திரப் பத்திரிக்கை
பக்கங்களைச் சுவாசிக்க உதவும் இயந்திரம்…
🌸
இன மொழி மதம் நாடு
பேதமில்லாத சமத்துவன்…
🌸
மொட்டை கடிதாசியைப்
பார்த்துவிட்டு
கோபக்கனல்களை
தணலாகக் கொட்டியதோ?
~பிரியமுடன் பிரியா 💕

நிச்சயமாகி திருமணத்திற்குக்
கனாக்கண்டு காத்திருக்கும் வேளையில்
என்னவனின் எழுத்தில்
எங்களைப் பற்றிய
எதிர்கால கனவுகள்
இனிப்பான இதறொற்றல்
இதயத்தின் உயிர்மூச்சாக
என்னுள் அவனை நிறைக்க
உரையிலிட்ட சுகமான
பரிசுகளைச் சுமந்து வர
அதைச் சேகரிக்கக்
கால் கடுக்க கதவருகில்
காத்திருந்த நாட்களுக்குக்
கணிப்பொறியில் வரும் மின்னஞ்சலோ
அலைபேசியில் வரும் குறுஞ்செய்தியோ
புலனத்தில் வரும் புகைப்படமோ
காயலையில் காணும் முகமோ
முகநூலில் வரும் செய்தியோ
படவரியில் பகிரும் சுயஉருவோ
வலையொளியில் வரும் விழியமோ
தராத சுகத்தினை தந்த
தபால் பெட்டிக்கு ஈடிணையில்லையே..!
புலனம் – WhatsApp
காயலை – Skype
படவரி – Instagram
~பிரியமுடன் பிரியா 💕
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.