
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பாரதி ஒரு சித்தன்..!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஔவை வழி பற்றி
“புதிய ஆத்திச்சூடி”
படைத்து
அறத்தைப் போற்றிய அறக்கவி!
வீறுகொண்டு
“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே”
முழங்கி சக்தி கொடுத்த
விடுதலைக் கவி!
கவிநயத்துடன்
“பாஞ்சாலி சபதம்” எழுதி
“பாஞ்சாலி” பாரத தேவி
உருவகப்படுத்தி
காவியம் படைத்த நாடகக்கவி!
இன்னிசையாக
“சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!”
இசைமழைப் பொழிந்த
இசைக்கவி!
சிறாருக்கு
“ ஓடி விளையாடு பாப்பா”
பாடி நற்பண்புகள்
போதித்த குழந்தைக்கவி!
மதலைக்கு
“ தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற தாயென்று கும்மியடி பாப்பா” என
பாடி மகிழ்ந்து
நாட்டுப் பற்றை ஊட்டிய தேசக்கவி!
எழுச்சிமிக்க
“ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி” என
ரஷ்யப் புரட்சிப்
பாராட்டிய புரட்சிக்கவி!
தேனாக
“செந்தமிழ் நாடெனும் போதிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!” என
வலிமைமிக்க வரிகள்
வடித்த சுதந்திரக்கவி!
நெஞ்சுருக
“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என
நெகிழ்ந்து
நல்கிய உணர்ச்சிக்கவி!
தாய் தமிழன்னைக்கு
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!” நெஞ்சம் நிமிர்த்தி
பெருமை போற்றும் தமிழ்க்கவி!
வசனத்தில்
“ சக்தி எல்லை யற்றது, முடிவற்றது, கூட்டுவது, கலப்பது..” என
சரளமாகச் சக்தியை
விளக்கிய விஞ்சானக்கவி!
அன்புடன்
“பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்..” என
காதல் இரசம் சொட்டக்
கவி வரைந்த காதல்கவி!
வியக்கத்தகு
“விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வா வெளியென நின்றனை..” என
பிரமாண்ட தோற்றம்
படைத்த பிரபஞ்சக்கவி!
பெண்ணடிமை ஒழிக்க
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்” என
வெகுண்டு
பொங்கியெழும் புதுமைக்கவி!
மனதை ஒருமுகப்படுத்தி
“எனக்கு வேண்டும் வரங்களை
இசைபேன் கேளாய் கணபதி” என
ஆனைமுகத்தன் அருள்
வேண்டிச் சரணடைய
வழிகாட்டிய பக்திக்கவி!
தீர்க்கதரிசியாய்
“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என
பாடி களித்து வருங்காலம்தனை
மெய்ஞானம் கொண்டு
மொழிந்த மாபெரும் மகாகவி!!!
என் பாட்டனாருக்கு
இனிய பிறந்த
நாள் வாழ்த்துகள் 🌺🌺🌺
– பிரியா பாஸ்கரன் 🙏🏻