
முத்தாய் உதிரும்
உன் விழி நீரில்
உறைந்தது உதிரம்
என் இதய சிப்பிக்குள்…❤
– பிரியா பாஸ்கரன் ❤️
My thoughts and lyrics

முத்தாய் உதிரும்
உன் விழி நீரில்
உறைந்தது உதிரம்
என் இதய சிப்பிக்குள்…❤
– பிரியா பாஸ்கரன் ❤️

💡💡 💡 💡 💡 💡 💡 💡
மின்விளக்கு
💡💡 💡 💡 💡 💡 💡 💡
வீட்டில் ஒளிரும் நிலா..
எங்கே
நட்சத்திரக் கூட்டம்..?
💡💡 💡 💡 💡 💡 💡 💡
விட்டத்தில் விரிந்திருக்கும்
வட்டத்தின் கீழ்
மினுமினுக்கும் மின்மினிப்பூச்சி…
💡💡 💡 💡 💡 💡 💡
அறையின் அறியாமை
அகற்றும் அறிவொளி..
💡💡 💡 💡 💡 💡 💡
இரவின்
பகலவன்…
💡💡 💡 💡 💡 💡 💡
தினமும்
பெளர்ணமி
மின்சாரம் மனம்
வைத்தால்..
💡💡 💡 💡 💡 💡 💡
பசிக்கு இரையாக்கும்
விட்டில் பூச்சிகளை..
💡💡 💡 💡 💡 💡 💡
ஒளிப் பாய்ச்சி
ஒளிந்திருப்பதை
காட்டிக்கொடுக்கும்
ஒற்றன்..!
💡💡 💡 💡 💡 💡 💡
மஞ்சள் இரத்தம்
பாய்ச்சும் சூரியன்!
💡💡 💡 💡 💡 💡 💡
எட்டும் தூரத்தில்
இருக்கும்
விட்டத்து நிலா!
💡💡 💡 💡 💡 💡 💡
ஏகாந்த இரவுக்கு
எதிரி..!
💡💡💡💡💡💡💡💡
குடை ஜிமிக்கி
ஒளிர்கிறது
ஒய்யாரமாய்..
💡💡 💡 💡 💡 💡 💡
-பிரியா பாஸ்கரன் 💡💡💡

👁👁👁👁👁👁👁
நீ வருவாயென..!
👁👁👁👁👁👁👁
கருவிழியில் தெரியும்
உன் நிழற்படமும்
கண்ணீரில் கரைந்து
விடுமோவென அஞ்சி
கரையும் கண்ணீரை
விழியில் வழியாமல்
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கிறாள்
நீ வருவாயென…!
– பிரியா பாஸ்கரன் 👁

💀💀💀💀💀💀💀
மரணம்..!
💀💀💀💀💀💀💀
நித்தியமான
நிம்மதியான
நிரந்தரமான
நித்திரை
நிச்சயம்!
💀💀💀💀💀💀💀
மயானம் ஓலத்தில்
மவுனமாகும்…!
💀💀💀💀💀💀💀
அவர் அதுவானது
உயிரவிட்ட நொடியில்..!
💀💀💀💀💀💀💀
வருகிறேன்
என சொல்லிவிட்டு
வராமலேயே
சென்ற இடம்..!
💀💀💀💀💀💀💀
மனதினை
கண்ணீரால்
நிறைத்திடும்
அரக்கன்..!
💀💀💀💀💀💀💀
வாழ்வின்
இறுதியில்
ஊர்வலம் செல்லும்
ஊர்தி..!
💀💀💀💀💀💀💀
வலியால்
வாழ்வோருக்கு
வரம் தரும்
கடவுள்..!
💀💀💀💀💀💀💀
அழையாமலேயே
வரும் விருந்தாளி!
💀💀💀💀💀💀💀
எப்போது
எப்படி வருவாயென
தெரியாது
ஆனால் வருவது
உறுதி..!
💀💀💀💀💀💀💀
– பிரியா பாஸ்கரன் 🙏🏻

💗💗💗💗💗💗💗💗
காதல் மனது …!
💗💗💗💗💗💗💗💗
மனதில் மலர்ந்து
மரணம் வரை
உடனிருப்பதே
உண்மையான உறவு..!
💗💗💗💗💗💗💗💗
உனை
மறந்தால் தானே
நினைப்பதற்கு!
💗💗💗💗💗💗💗💗
என்னை
தனிமை தீண்டியதில்லை
என்னுள்
நீ நிறைந்திருப்பதால்..!
💗💗💗💗💗💗💗💗
காற்றையும் காதலிக்கிறேன்
உனை தழுவும் காற்று
எனை தழுவுவதால்..!
💗💗💗💗💗💗💗💗
என் ஒவ்வொரு
நொடியின்
தொடக்கமும் முடிவும் நீயே..!
💗💗💗💗💗💗💗💗
நொடிக்கு ஒரு முறை
துடிக்கும் இதயம்
உரைக்கும் பல முறை
உன் பெயரை..!
💗💗💗💗💗💗💗💗
ஆசையுடன்
ஆயுள் கைதியானேன்
உன் மனச்சிறையில்..!
💗💗💗💗💗💗💗💗
உன் உரசும் தாடியில்
உயிர்த்தெழுந்தேன்
என் உச்சிமோந்த பொழுது..!
💗💗💗💗💗💗💗💗
என் தேடலின்
முடிவு..
உன் நெஞ்சமெனும்
பஞ்சணை..!
💗💗💗💗💗💗💗💗
– பிரியா பாஸ்கரன் 💕

👁👁👁👁👁👁👁👁👁
காதல் விழி..!
👁👁👁👁👁👁👁👁👁
சத்தமின்றி யுத்தமிடும்
உன் விழியில்
சிக்கி சிறையானது மனது..!
👁👁👁👁👁👁👁👁👁
சத்தமின்றி
படம் பிடித்தது
நம்மை..
நம் விழிகள்..!
👁👁👁👁👁👁👁👁👁
உறங்காத கண்களும்
உறங்கிப்போனது
சத்தமின்றி
முத்தமிடும்
உன் விழியில்..!
👁👁👁👁👁👁👁👁👁
கனவிலும்
உன் விழியைக்
காண விழைகிறேன்..
உன் விழியில்
எனை காண்பதால்..!
👁👁👁👁👁👁👁👁👁
கனவில் நீ வர
கலைந்திடக் கூடாதென
கண் திறவாது இருக்கிறேன்….!
👁👁👁👁👁👁👁👁👁
உன்
விழியின் சாரலில்
நனைகிறது மனது
மகிழ்வில்..!
👁👁👁👁👁👁👁👁👁
விழி தழைத்தது
தன்னவனின்
விழி மொழி தாளாமல்..!
👁👁👁👁👁👁👁👁👁
உன்
இரு விழி கவி எழுத
மொழியானது
என் விழி!
👁👁👁👁👁👁👁👁👁
என்
கவிதை கிறுக்கலுக்கு
கருவானது
உன் கருவிழி..!
👁👁👁👁👁👁👁👁👁
– பிரியா பாஸ்கரன் 💕

💰🚫🛑🚫🛑🚫🛑🚫🛑🚫💰
கருப்பு வெள்ளி..
சூனியத் திங்கள்..!
💰🚫🛑🚫🛑🚫🛑🚫🛑🚫💰
ஒத்தையடிப் பாதையில் நடந்து
மந்தையில் மாதந்தோறும் கூடும்
சந்தைக்கு சகோதரியுடன் சலசலத்து
எந்தையுடன் சண்டைப் பிடித்து
தந்தைக் கொடுத்தப் பணத்தில்
விந்தையானக் கண்ணாடி வளைவிகளை
முந்திக்கொண்டு வாங்கும் சந்தோசம்..
மெத்தையில் சொகுசாக சாய்ந்து
ஆந்தைப்போல நள்ளிரவு விழித்து
சொத்தைப் பொருளை வாங்க கணிப்பொறியில்
கத்தைப் பணத்தைச் செலவிட்டாலும்
நத்தையாக மனம் சுருங்குவதால்
கந்தையாக அவ்வெண்ணத்தை தூக்கிப்போட்டு
சிந்தையிலிருந்து நீக்கிவிட்டேன் நிரந்தரமாக..
கறுப்பு வெள்ளி….சூனியத் திங்கள் இரண்டையும் ..!
-பிரியா பாஸ்கரன் 🙏🏻


இந்த கவி நிலைமண்டில ஆசிரியப்பாவில், சொல் பின்வரும் நிலையணியில் எழுதியது. 🙏🏻

நீ..
என் பாதம் தொட
வீழ்ந்தாலும்
உனை மிதிக்க
மனம் வரவில்லை..
அதனால்
அனைத்து
சூடிக்கொள்கிறேன்
என் கார்கூந்தலில்..
தொட்டு
முத்தமிடு என்
உச்சந்தலையில்..
-பிரியா பாஸ்கரன் 🌺 🌸 🌺
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.