
நீயே சொல்…
எதிர்பார்ப்பு இல்லை எனில்
ஏமாற்றம் இல்லை என்று
என்னிடம் நீ
எதிர்பார்ப்பது மட்டும்
என்ன நியாயம்?
-பிரியா பாஸ்கரன் ❤️
My thoughts and lyrics

நீயே சொல்…
எதிர்பார்ப்பு இல்லை எனில்
ஏமாற்றம் இல்லை என்று
என்னிடம் நீ
எதிர்பார்ப்பது மட்டும்
என்ன நியாயம்?
-பிரியா பாஸ்கரன் ❤️

கற்ற பாடம்..!
மனிதனுக்கு நிழல் தரும் குடையாகும்
மண்ணிற்கு தழைகள் உரமாகும்
மண்ணடுப்புக்கு விறகாகும்
மானிடர் வெட்டிச்சாய்தாலும்!
மரம் சொன்னது:
“இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்!”
முகிலின் தேடல் மழையாகி
விதை முளைத்து விருட்சமாய் வளர்ந்து
நீரை உறிஞ்சி ஆவியாக்கி
கொண்டலிடம் சென்றுவிடும்!
முகில் சொன்னது:
“தேடல் சுகமானது!”
காற்றின் தேடல் இனிய கீதம்
காற்றின் தொடல் மெய்க்குச் சுகம்
காற்றின் பாடல் கொடிக்கு சந்தோசம்
காற்றின் மோதல் அலைக்கு உற்சாகம்!
காற்று சொன்னது:
“கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே!”
உச்சிக்கு படிப்படியாகச் ஏறினால்
உச்சாணியில் நிலைத்து நின்று மகிழலாம்
நிதானமாக கீழே இறங்கினால்
நிமிர்ந்து நிற்கலாம் சறுக்கி விழாமல்!
மலை சொன்னது:
“செய்யும் செயல் யாவிலும்
நிதானமே பிரதானம்!”
அலைகள்
ஒன்றன் பின் ஒன்றாக
ஓடோடி வந்து
பாதத்தை முத்தமிட்டு
கொஞ்சி விளையாடி
மகிழ்வித்து மகிழ்ச்சியானது!
கடல் சொன்னது:
“அகத்தில் ஆழ்ந்த அமைதியிருந்தால்
புறத்தில் இன்பம் அலையலையாகப் பொங்கும்!”
விடிய விடிய விளக்கொளியில்
விளையாடி விழுந்தது
விட்டில் பூச்சி..
விட்டில் பூச்சிச் சொன்னது:
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல!”
சமூகமாக சாரி சாரியாக
சேர்ந்து நெளிந்து
வளைந்து ஊர்ந்து தன்னை விட
வலுவான உணவுதனை
பலூ தூக்கி சுமைதாங்கி
பதப்படுத்தம் பொழுது
வரும் இடர்களைத் தகர்த்தெரியும்!
எறும்புச் சொன்னது:
“ஒற்றுமையே பலம்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!”
– பிரியா பாஸ்கரன் 🙏

யார் சொன்னது?
சிட்டுக்குருவி
சிறக்கடித்துப் பறக்கும்
சில்லென்ற வானில்
மட்டுமென..
எங்கள் வீட்டு
செடியிலும்
சிட்டுக்குருவி வான் விட்டுச்
சிறகுமடித்து
சிக்கென அமரும்..
வாருங்கள் பேசலாம்
வரும் ஞாயிறு
வடை காப்பியுடன்
ஓர் உரையாடல்
எம்முறவான சிட்டுக்களுடன்!
-பிரியா பாஸ்கரன் 💕

வெயிலோ
வெண்பனியோ
சிறகடித்துப் பறக்கிறேன்
சில்லென்ற வானில்..
நீயும் வருகிறயா..?
-பிரியா பாஸ்கரன் 💕

ஏ மானிடா..
நீ மட்டுமா நனைகிறாய்
சில்லென்ற வெண்பனியில்..
நானும் தான்
நனைகிறேன்..
வலம் வருகிறேன்
வெண்பனிச் சாலையில்..
வழுக்கி கொண்டு
வழித்தடம் மாறாமல்
விழித்துச் சாலை
விதியை மதித்து
வழியில் ஓட்டிச் சென்றுவிடு
வீட்டுக்குச் சென்றிடுவோம்
வாய்க்காலில் விழாமல்!!
-பிரியா பாஸ்கரன் ❄️

எனை நீ பார்த்தபொழுது
அறிந்தேன்
ஆண்களுக்கும்
அழகாக வெட்கம் வரும் என்றும்
அது அழகு என்றும்..!
எனை நீ உச்சி முகர்ந்தபொழுது
உணர்ந்தேன்
ஆண்களுக்கும்
தாய்மை உண்டு என்றும்
அது அழகோ அழகு என்று..!
-பிரியா பாஸ்கரன் 🙏

மதியை ஆணாகவும் பகலவனை பெண்ணாகவும் வைத்து எழுதிய கவிதை…
☝️சேதுராமன் ஐயா சொன்னார். அவருக்காக…
ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்கும் பின்
ஒரு பெண் உண்டல்லவா..!
நல்லிரவில் நடுநாயகனாக
வானவெளியில் சுடர்விட்டுக்
கோலோச்சும் மதியானவனின்
பின்னும் பாரியாள்
பானுவின்(சூரியன்)
பங்கு உண்டல்லவோ…!?
– பிரியா பாஸ்கரன் 🌞 🌝 🙏

காலையில்…
சாலையில் வாகனத்தில் செல்ல
வெண் சாமரம்
வீசி வீற்றிருந்தாள் பனித்தோழி..!
மாலையில்..
காணவில்லை தோழியை..ஓஓஓ..
காதலன் கதிரவன் கண் பார்த்திடக்
கண்டு வெட்கி கரைந்து போனாயோ..!?
-பிரியா பாஸ்கரன் ❄️ ❄️ ❄️

வறியவருக்கு வழங்கும்
வண்மை அவர்
வாழ்க்கையில்
வறுமையை நீக்கி
வளம்பெறச் செய்து
வழங்கியவருக்கும்
வளமை பெறச் செய்திடும்!
தம்மால் தானம்
தரமுடியாவிட்டாலும்
தருபவர்களைத் தடுக்காமல்
தங்குதடையின்றி
தேவையானவர்களுக்கு
தேவையானதைத்
தேவைப்பட்ட நேரத்தில்
கொடுக்கும் நல்லுங்களை
வாழ்த்துவோமாக அதுவே
சிறந்த பண்பு எனக் கொள்க
இஃதே ஈவது விலக்கேல்
என்றே கொள்க!!
– பிரியா பாஸ்கரன் 🙏

அழகாக இருக்கும்
அத்தனைக்கும்
ஆபத்துக்கள்
அண்டாமலிருக்க
முள்ளாக பாதுகாக்க
துணை வேண்டும் போல..
அப்பப்பா..
அதனால் தான்
எனைக்காக்க
என்னைச் சுற்றி
எத்தனை உறவுகள்
தோழமைகள்… !!
😜😇😂
– பிரியா பாஸ்கரன் 🌹 🥀
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.