
தலைவி மரம்:
பகலவன் விரைந்தெழுந்து வருகிறான்
மதியின் முகம் காண அவள்
நாணம் கொண்டு ஓடி ஒளியும் முன்..
அந்த அழகைக் காண கண் கோடி வேண்டுமல்லவா..!
தலைவன் மரம்:
இரவு பகல்
வெயில் மழை
வெப்பம் தண்மை
இடி மின்னல் என
என்நேரமும் எனைப் பிரியாமல்
என்னருகில் துணையாக
நீ நிமிர்ந்து நிற்கும் அழகைக் காண
எத்தனை கண்கள் வேண்டும்..!
தலைவி மரம் :
காற்றில் அசைந்து நாணம் கொண்டது…
மதியும் பகலவனும்:
மதியும் கற்றது நாணத்தின்
மறு வகையை மரத்திடம்..
நின்று தன்னவனின் முகம் பார்த்து
நலம் விசாரித்து விடைப் பெற்றது
நாள்தோறும்..!
-பிரியா பாஸ்கரன் 💕










