
கழனி வரப்பில
கால் நடையாக நடக்கையிலே
கருத்த முடி காற்றிலாட
கிணறோரம் போவாரே
அப்ப கண்பார்க்க
அந்த நேரம்
கண்ணசைவில் நலமறிய
காற்றில பறந்தாளே
வெள்ளை வேட்டியிலே
வண்ணச் சட்டையுடன்
கம்பீரமாக மீசைமுறுக்க
கண்டுகண்கள் சொக்கிடுமே
திருவிழா காலத்திலே
தினந்தோறும் கோவிலுக்கு வர
தயங்கி தயங்கி பார்வையாலே
திரும்ப திரும்ப பார்ப்பாளே
கடிகாரம் கட்டிய
கையாலே ஆட்டியாட்டி
அனைவரையும் அன்புடன்
அடக்கிவைப்பாரே கம்பீரம்மாய்
போறப் போக்கில
புஞ்சிரிப்பு சிந்த
பார்த்த நொடியில
பூப்போல அகம் மலருமே
நீர் சொல்லாத வார்த்தையும்
நல்லாப் புரிந்ததென்று
நாணத்தில் அவள் சிவக்க
நிமிர்ந்த நடையோடு போவாரே
படபடன்னு வண்டியில நீர்வர
படபடன்னு பட்டாம்பூச்சியாய்
தடதடன்னு இதயம் துடித்து
தாவிக்குதிக்குமே உம்முகம்காண
வாசமல்லிப் பூவுடன்
வாடாமல்லித் தாவணியிலே
வாவெனழைக்க வாஞ்சையுடன்
வாசலுக்கு ஓடிவருவாளே
வார்தையாட மனந்துடித்தாலும்
வளர்ந்தவிதம் தடுக்க
காலம் மெல்ல பதிலளிக்குமென
கனவு கண்டு காத்திருந்தாளே
கல்வியில் கவனம் சென்றதில
கருத்துடன் படித்ததில
காலம் வெகுவாக ஓடினதில
கல்யாண வயதும் வந்ததுவே
காதலென்பதே மாயையென
கட்டுக்கோப்பாக வளர்ந்ததில
கட்டுப்பட்டு குடும்பத்துக்கு
கல்யாணமும் முடிவானதே
காதல் என்பதே மறந்ததோ?
காதல் என்பதே மாயமோ?
அது என்ன உணர்வா? உயிரா?
அன்றும் இன்றும் தெரியலையோ?
– பிரியா பாஸ்கரன் 💕









