எதிலும் மகிழ்ச்சி
காண்பவர்கள்
பெண்கள்…
பெற்றவர்களுக்கு மழலையாய் என்றும்
இருப்பதில் மகிழ்ச்சி
படிப்பதில் வல்லவராய் இருப்பதில் மகிழ்ச்சி
நட்புடன் இன்பமாய் ஆடி பாடுவதில் மகிழ்ச்சி
அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்பதனை உடைத்து பட்டம் பெற்று பதவி வகித்ததில் மகிழ்ச்சி
இருமனம் இணைந்த திருமணத்தில் இணையருடன் வாழ்வாங்கு வாழ்தலில் மகிழ்ச்சி
புலம் பெயர்ந்து மறுதாய் வீடான மாமியார் வீட்டிற்குச் சென்றதில் மகிழ்ச்சி
பிள்ளைகளையும் கணவனையும்
இரு கண்களாய் போற்றி இன்பத்தில் திளைப்பதில் பெரும் மகிழ்ச்சி
தன்னம்பிக்கையுடன்
தளராது செய்யும்
தொழிலில் முனைந்து
முன் செல்வதில் மகிழ்ச்சி
கடல் கடந்து வந்து
வாய்த்த வாழ்வில்
இன்னல் பல கடந்து
வாழ்வதில் மகிழ்ச்சி
அடாது மழை பெய்தாலும்
விடாது பணி பெய்தாலும்
பொங்கல் தீபாவளி
கொண்டாடுவதில் மகிழ்ச்சி
பயின்ற கலாச்சாரத்தைப்
பண்பாட்டை அடுத்த
தலைமுறைக்கு
எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி
தேவையானதை வாங்கி
தேவையற்றவையும்
சில நேரம் வாங்கி
சுய அலசலில் ஈடுபடுவது மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்றால் என்ன கேள்விக்குக்
கணவனிடம் இதைத்தான் நான் எழுதினேன் எனச் சொல்லும் முன்னே
நீ இப்படி தான் எழுதியிருப்பாய் என அவர் சொல்லக் கேட்கும் தருணம் மகிழ்ச்சி
பிடித்த உறவிடம் செல்லச் சண்டையிடுவதில் மகிழ்ச்சி
உறவுகளைப் பொக்கிசமாய் கட்டிக் காப்பதில் பெறும் பெரும் மகிழ்ச்சி
எதைச் செய்தாலும்
திருதச் செய்வதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
சுதந்திரமாக எண்ணத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி
எந்தப் பணியாயினும்
அருகன் இட்ட கட்டளையாய்
செவ்வனே செய்வதில்
பெரும் மகிழ்ச்சி..!
மகிழ்ச்சி உள்ளத்திலிருந்து வருகிறது. தீதும் நன்றும் பிறர் தர வரா
என்பதைக் கடைப்பிடிக்க
முயல்வது மகிழ்ச்சி..!
இறுதியில் எல்லாம் அவன் செயல் என விட்டுவிடுவதில் பேரானந்த மகிழ்ச்சி..!
~பிரியமுடன் பிரியா 🙏🏻