
விழுது உறவாகி
வேரூன்றித்
தாங்கியிருக்கும் வீடு…
அடுத்த சந்ததிக்கு
இயற்கைச் சொத்தாய்
விட்டுச்சென்ற விருட்சம்…
உதிர்ந்த சுண்ணாம்பும்
உடைந்த செங்கல்லும்
உரைக்கும் மடமையின்
உச்சம்தனை…
வாழ்ந்த வீடு
வரலாறாக்கப்பட்டது
புலம் பெயர்ந்த
மக்களால்..
வளைந்து கொடுக்காமல்
நிமிர்ந்து நிற்கும்
கம்பீரமாய் ஆலம்
நேற்று இன்று நாளை…
உயிரோவியமாய் இருந்தது
அன்று
கலைந்த ஓவியமாய்
இன்று…
கயிற்றுக் கட்டில்
கோழி சேவல் கூறும்
எஞ்சியிருக்கும் கலாச்சாரம்…
ஒவ்வொரு முறையும்
கடந்து செல்கிறோம்
திண்ணை சொல்லும்
கதையை மறந்து…
வேர்களைத் தேடிச்
செல்லும் சந்ததிக்கு
தலைமுறைதத்துவமாய்
ஆணிவேராய்
இருக்கு ஆலம்…
தலைமுறைதத்துவமாய் – வழிவழியாய்
~பிரியா பாஸ்கரன்







